Uncategorized கும்பகோணம்

தாராசுரத்தில் அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணையாக ரூ. 2000 மற்றும்14 வகையான அத்தியாவசிய பொருட்களை தாராசுரம் பொதுவிநியோக மையத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், திமுக தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கல்யாணசுந்தரம், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர்கள் குடந்தை தெற்கு அசோக்குமார், குடந்தை கிழக்கு கணேசன், குடந்தை வடக்கு பாஸ்கர், பேரூர் […]

Uncategorized

கடன் வசூலில் நிா்பந்தம்:தனியாா் நிதி நிறுவனங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

பொது முடக்கக் காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையைத் திரும்பச் செலுத்த நிா்பந்தம் செய்யும் தனியாா் வங்கிகள் மற்றும் நுண்நிதி கடன் நிறுவனங்களுக்கு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தனியாா் வங்கிகள், நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன் தவணைத் தொகையைத் திரும்பச் செலுத்தக் கேட்டு வலியுறுத்தி […]

Uncategorized

லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க 0 கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு

ஜனவரி 1ம் தேதியிலிருந்து லேண்ட்லைனில் இருந்து, மொபைல் போன்களுக்கு அழைக்க, பூஜ்யம் (0) கட்டாயம் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: லேண்ட்லைனிலிருந்து மொபைல் போனுக்கு அழைக்கும்போது, மொபைல் எண்ணுக்கு முன்பாக, பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என கடந்த மே 29ம் தேதி டிராய் பரிந்துரைத்திருந்தது. இப்பரிந்துரையை ஏற்று, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இதனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.இப்புதிய முறையை […]

Uncategorized

சின்னம்மா விரைவில் விடுதலை – அபராதத் தொகை செலுத்தப்பட்டது

பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் ஹால் 32 வது நீதிபதி முன்பாக சின்னம்மா சார்பில் சொத்து வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அபராதத் தொகை 10.10 கோடி DD ஆக 18.11.2020 ம் தேதி செலுத்தப்பட்டது. ரெமிக்சன் கிடைத்தால் விரைவில் எப்போது வேண்டுமானாலும் சின்னம்மா விடுதலை ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uncategorized

இண்டேன் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்

இந்திய எண்ணெய் நிறுவனம் இண்டேன் சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்காக நாடு முழுவதும் 77189 55555 என்ற என்னை அறிமுகப்படுத்த உள்ளது. வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும். குறுஞ்செய்தி மற்றும் ஐவிஆர்எஸ் மூலமும் இந்த வசதியை பெற முடியும். வாடிக்கையாளர்கள் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலம் சென்றாலும் முன் பதிவு எண் அப்படியே இருக்கும். தற்போது அமலில் இருக்கும் எண் வருகிற 31-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு நிறுத்தப்படுகிறது. அதற்குபிறகு நவம்பர் 1ம் […]

Uncategorized

விவசாய மேலாண்மையில் நவீன தொழில்நுட்பம்-அரசு இன்ஜினியரிங் காலேஜ் மாணவர்களின் புதிய சாதனை

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் ஹிர்த்திக் ஸ்ரீராம், அம்சத் கான், முகமது அலி ஜின்னா, கோவிந்தன் ஆகிய மாணவர்கள் இணைந்து துறை தலைவி கவிதா வழிகாட்டுதலின் அடிப்படையில் விளை நிலங்களில் ஏற்படும் நீர் தட்டுப்பாடு மற்றும் பயிர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை கண்டறியும் அதிநவீன தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு தேவையான நீர்ப்பாசன வசதி, உரம், pH, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்ட […]

Uncategorized

குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி

காசியாபாத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த சவுமியா பாண்டே, கொரோனா பரவல் காரணமாக நோடல் சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டு உள்ளார். கர்ப்பிணியாக இருந்த சவுமியாவுக்கு, 2 வாரங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. அரசு பணியாளர்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு உள்ள நிலையிலும், சவுமியா 14 நாட்களில் பணிக்கு திரும்பி, கைக்குழந்தையுடன் பணியாற்றி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். கொரோனா காலம் என்பதால் ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பு அதிகமாக உள்ளதென சவுமியா குறிப்பிட்டுள்ளார். குழந்தை பெற்ற 14 […]

Uncategorized

ஆவின் மேலாளருக்கு கத்தி குத்து – ஒருவர் கைது

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேனேஜராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் (27) பணிபுரிந்து வருகிறார். இங்கு, ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடியை சேர்ந்த அன்புநாதன் (28) வாட்ச்மேனாக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக, மதுபோதையில் பணிக்கு வருவது, பொருட்களை திருடி விற்பது, சரியாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். மேனேஜர் திருமுருகன் அவரை கண்டித்தும், தொடர்ந்து சரிவர வேலைக்கு வராமல் இருந்ததால் அன்புநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று […]

Uncategorized

திருச்செந்தூர் முருகன் கோவில் திருவிழா

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு செப்பு கொடிமரத்தில் முருகப்பெருமானுக்கு கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனையும் நடைபெற்றது. கொரோனாவை முன்னிட்டு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் உள் பிரகாரத்தில் நடைபெறும். வருகிற செப்டம்பர் 10ம் தேதி ஐந்தாம் நாள் குடைவரை வாயில் தீபாராதனையும், 12ம் தேதி ஏழாம் நாள் வெற்றி வேர் சப்பரத்தில் சண்முகப் பெருமான் […]