கும்பகோணம்

அன்னை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட நாள்

அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட நாள் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் மாணிக்கவாசுகி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சோமசுந்தரம் வரவேற்றார். துணை முதல்வர்கள் இளஞ்செழியன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர் மணிகண்டன் வேங்கை மரம் நட்டு சிறப்பித்தார்கள். இறுதியாக நாட்டு நலப்பணித் திட்டம் அலுவலர் முனைவர் வெங்கடேசன் நன்றி […]

கும்பகோணம்

சோழபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சோழபுரம் அலுவலகத்தில் மூன்றாவது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முஹம்மது பாரூக், மாவட்ட பொருளாளர் ஷாகுல், மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது மஹாதீர், மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது கவுஸ், சிக்கந்தர் பாட்சா, மாவட்ட மருத்துவரணி செயலாளர் வரிசை முஹம்மது, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் நசுருதீன், ஜாகிர் உசேன், கிளை செயலாளர் அப்துல் மாலிக், கிளை பொருளாளர் ஜாகிர் உசேன், […]

கும்பகோணம்

கும்பகோணத்தில் பருவமழை பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்பகோணத்தில் பருவ மழையினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் பொது மக்களை காப்பாற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் டபிர் படித்துறையில் நடைபெற்றது. வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் புயல், வெள்ளம், கனமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இவர்களை எவ்வாறு பாதிப்புகளில் இருந்து எளிதில் மீட்டு கொண்டுவருவது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி தீ அணைப்பு அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையில், […]

கும்பகோணம்

குழந்தையின் மருத்துவ தேவைக்காக உருவாக்கப்பட்ட கூகுள் பே செயலி

தஞ்சாவூரை சேர்ந்த பாரதி என்கின்ற குழந்தைக்கு முதுகு தண்டு வடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதற்கு மருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கு 16 கோடி செலவாகும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். அந்த சிறிய குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு ஆரம்பித்து அதற்கு கூகுள் பே செயலியை தொடங்கி உள்ளார்கள். அதன் மூலம் 16 லட்சம் பேர் 100 ரூபாய் உதவி செய்தால் 16 கோடி ஆகிவிடும். அதனால் […]

கும்பகோணம்

கும்பகோணத்தில் 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் நெய்வாசல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (32). இவர் திருப்பூர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 5 வயதில் மிருதுளா ஸ்ரீ பெண் குழந்தை உள்ளது. அவரது மனைவி மாரியம்மாள் (27). அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவரது உறவினர்கள், ‘108’ ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தனர். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்ணை, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பந்தநல்லூர் […]

கும்பகோணம்

திருபுவனம் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி

திருபுவனம் பேரூராட்சியில் கீழ்சாலையில் உள்ள மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் அரசு கொறடா முனைவர் கோ.வி. செழியன் ஆகியோர் பார்வையிட்டனர். உடன் செயல் அலுவலர் பங்கயற்செல்வி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கும்பகோணம்

வேப்பத்தூர் பேரூராட்சியில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் தூய்மை முகாம்

வேப்பத்தூர் பேரூராட்சியில் கல்யாணபுரம் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும், அரசு கொறடா முனைவர் செழியன் பார்வையிட்டனர். உடன் செயல் அலுவலர் திருப்பதி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கும்பகோணம்

ஆடுதுறையில் தஞ்சை மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் முப்பெரும் நிகழ்ச்சி

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மக. ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி சிறப்புரையாற்றினார். வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீட்டை கடந்த 40 ஆண்டு காலமாக போராடி பெற்றுத்தந்த மருத்துவர் ராமதாசுக்கு நன்றி தெரிவித்தும்,1987ஆம் ஆண்டு தொடர் சாலை மறியல் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மலர்தூவி வீரவணக்கம் புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சத்ரியப் பேரினத்துக்கு சமூகநீதி எழுச்சி […]

கும்பகோணம்

தாராசுரம் பேரூராட்சியில் வாய்க்கால்கள் தூய்மைப்படுத்தும் பணி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோர் காணொலி காட்சி கூட்ட அறிவுரைகளின் படி வடிகால்கள், வாய்க்கால்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் தாராசுரம் பேரூராட்சி, புதுரோடு மாத்தி வாய்க்கால் தூர்வாரும் பணியினை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆய்வு செய்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, கும்பகோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கும்பகோணம்

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் தூய்மை பணி முகாம்

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோர் காணொலி காட்சி கூட்ட அறிவுரைகளின்படி வடிகால்கள் தூய்மைப்படுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஒப்பிலியப்பன் கோயில் திருமஞ்சன வீதியில் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணியினை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். செயல் அலுவலர் சிவலிங்கம், திருநாகேஸ்வரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர்.